சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள தர்காவில் கந்தூரி விழா
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள தர்காவில் கந்தூரி விழா. ஏராளமானோர் பங்கேற்பு
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரில் தர்கா உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஹசரதா சையதா பாத்திமா பீபி சாகியா தர்காவின் கந்தூரி விழா நடைபெற்றது.
இன்று மாலையில் அனைவருக்கும் தப்ரூக் எனப்படும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. பரம்பரை டிரஸ்டியும், முத்தவல்லியுமான ஹாஜி சையத்ஜிலானி, மற்றும் அஸ்மத்பாஷா, நூர் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் திரளாக கலந்து கொண்டனர்.