in

மதுரை விக்கிரமங்கலத்தில் உள்ள தத்துவமஸி ஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை கூட்டு பிரார்த்தனை

மதுரை விக்கிரமங்கலத்தில் உள்ள தத்துவமஸி ஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை கூட்டு பிரார்த்தனை

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1 – ஆம் தேதி மாலை அணிவித்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று 18 படி ஏறி தரிசனம் செய்துவிட்டு வருவது தொன்று தொட்டு நடைபெற்று வரும் நிகழ்வு முதல் முறையாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் கன்னி சாமிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வரும் மூத்த ஐயப்ப பக்தர்களின் பாதங்களை கழுவி கன்னி பூஜை செய்து வழிபடுவது நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் தத்துவமஸிஅய்யப்பன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த ஐயப்ப பக்தர்களுக்கு முதல் முறையாக சபரிமலை செல்லும் பக்தர்கள் பாத பூஜை செய்து வழிபட்டனர் அதனைத் தொடர்ந்து அனைத்து ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்ட பஜனை பாடல்கள் நடைபெற்றது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது இதில் விக்கிரமங்கலம் சோழவந்தான் மேலக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

ஸ்ரீபேராட்சி அம்பாள் திருக்கோவிலில் ஐயப்ப பக்தர்களின் பூக்குழி திருவிழா

விருத்தாச்சலம் அருகே மணிமுத்தாறில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்