in

காரைக்கால்..கடற்கரையில் இளம் ஜோடி மிரட்டி மூவாயிரம் ரூபாய் ஜி பெயில் வாங்கிய காவலர்

காரைக்கால்..கடற்கரையில் இளம் ஜோடி மிரட்டி மூவாயிரம் ரூபாய் ஜி பெயில் வாங்கிய காவலர்… இளம் பெண்ணிடம் காவலர் அத்துமீறல் புகார்…
உறவினர்கள் வாக்குவாதம். வைரலாகும் வீடியோ.இதே காவலர் செயின் பறிப்பு, இளம் பெண்ணை செல்போனில் உல்லாசத்திற்கு அழைத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ள நிலையில் மீண்டும் அட்டூழியம்.

காரைக்கால் கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கல்லூரி சேர்ந்தவர்களும் மற்றும் காதலர்கள் கடற்கரை காதல் ஜோடிகள் அலையாத்து காட்டில் அத்துமீறி வருவதும் தொடர் சம்பவங்களாக இருந்து வருகிறது.

பகல் நேரத்தில் பெரியளவு கூட்டம் இல்லாததால் காதல் ஜோடிகள் அத்துமீறல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதனை பயன்படுத்தி காரைக்கால் கடலோர காவல் படையில் பணிபுரியும் ராஜ்குமார் என்ற காவலர் காதல் ஜோடிகளை தனியாக வரவழைத்து பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இன்று ஒரு காதல் ஜோடியிடம் கடற்கரையில் உள்ள புறநகர் காவலத்திற்கு வரவழைத்து மிரட்டி 3000 ரூபாய் ஜி பெயில் வாங்கியுள்ளார்.மேலும் அந்தப் பெண்ணை மிரட்டி தாலி இருக்குதா என்று கழுத்தை கை வைத்து பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது இத்தகவல் அறிந்து அந்தக் காதலின் நண்பர்கள் சிலர் அங்கு வந்து எப்படி பணம் வாங்குவீர்கள்..? அந்தப் பெண்ணை எப்படி மிரட்டினீர்கள்…?ஏன் தனிமை வர சொன்னீர்கள்…? என்று கேட்டுள்ளனர்.இதனை வீடியோ பதிவுடன் எடுத்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதே காவலர் ராஜ்குமார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு செயின் பறிப்பில் ஈடுபடுத்தும் ஒரு பெண்ணை தொலைபேசியில் தொடர்ந்து உல்லாசத்திற்கு அழைத்து டார்ச்சர் கொடுத்ததும் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் தற்போதைய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது..

What do you think?

மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது.. வைத்திலிங்கம் எம்பி தகவல்

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு