in

காவிரியில் தமிழகத்திற்கான நீரை பெற்றுத்தர கர்நாடகா அரசை நிர்பந்தம் செய்ய வேண்டும் – காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை திருச்சியில் பேட்டி

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேட்கவில்லை என்றால் மத்திய அரசு தலையிட்டு உரிய நீரை பெற்று தர வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி காவிரியில் தமிழகத்திற்கான நீரை பெற்றுத்தர கர்நாடகா அரசை நிர்பந்தம் செய்ய வேண்டும் – திருச்சியில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை திருச்சியில் பேட்டி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது….

மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலமும் ஒதுக்கப்படவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் என்கிற கேள்விக்கு …..

இது நியாயமா என நீங்களே சொல்லுங்கள் – வெறும் 26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிதிஷ் குமாரின் பீகார் மாநிலம் கட்டக்கூடிய ஜிஎஸ்டி 1900 கோடி தமிழ்நாடு கட்டுவது ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி – ஆனால் அவர்களுக்கு ஒரு லட்சம் கோடி வரை நிதி ஒதுக்குகிறார்கள். நமது தமிழகத்திற்கு எதுவுமே இல்லை.

பீகார் மாநிலத்திற்கு வெள்ள தடுப்பு பணிகளுக்காக 11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – ஆனால் நூறு ஆண்டுகளாக சந்தித்திடாத பெருவெள்ளத்தை நமது தமிழகம் சந்தித்தும் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்காக இதுவரை ஒரு
பைசா கூட ஒதுக்கப்படவில்லை- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட்டு சென்றார். இந்த பட்ஜெட்டில் ஆவது ஒதுக்குவார்கள் கருணையோடு என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்களிடம் கருணை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

அவர்களின் ஆட்சியின் ஆயுளை நீடிப்பதற்காக மட்டுமே நிதி ஒதுக்கி இருக்கிறார்கள்

பட்ஜெட்டில் தமிழகம் என்கிற பெயரில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றால் குறைந்தது 25 இடத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற செய்து இருக்க வேண்டும் என்கிற அன்புமணி ராமதாஸின் பேச்சு குறித்த கேள்விக்கு …..

இது எவ்வளவு பெரிய சர்வாதிகார பேச்சு – மோடி ஆர் எஸ் எஸ் கொள்கை உடையவர் என்றால் அன்புமணி ராமதாஸ் கூட இப்படி பேசலாமா?

அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை 2011ம் ஆண்டு முதல் பல்வேறு வகையில் முறைகேட்டில் ஏற்பாடு ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக கண்ட்ரோல் ஆப் எக்ஸாமினேஷன் 50 வயது உடையவர்கள் இறந்திருக்கிறார்கள்.

வினாத்தாள் திருத்துவதில் இருந்து எண்ணற்ற குளறுபடிகள் நடந்துள்ளது இது குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அங்கு உள்ள பதிவாளர் இருந்து பேராசிரியர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது தமிழக அரசு ஆனால் அவர்கள் விசுவாசமாக இருப்பது மத்திய அரசுக்கு
நமது உயர்கல்வி துறை அமைச்சர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் ஆளுநர் கலந்து கொண்டால் அங்கு துணை வேந்தர் கலந்து கொள்கிறார்.அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
நம் மாநில அரசுக்கு கட்டுப்பட்டவரா? அல்லது ஆளுநருக்கு கட்டுப்பட்டவரா என்பதனை தெளிவு படுத்த வேண்டும்.

காவிரி நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பில் தெளிவாக தெரிவித்திருக்கிறார்கள் நமக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் என்று தீர்ப்பை ஒரு மாநில அரசு நடைமுறை படுத்தவில்லை என்றால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது மத்திய அரசு – ஏன் பி.ஜே.பி அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது – பிரதமர் நரேந்திர மோடி இதில் தலையிட்டு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்று தர வேண்டும் – கர்நாடகா அரசை நிர்பந்தம் செய்ய வேண்டும்

தமிழகத்தில் கூலிப்படைகளை ரவுடிகளை ஒழிக்க வேண்டும் இது குறித்து நாங்களும் தொடர்ந்து எங்களுடைய கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்
என்றார்.

What do you think?

தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சி எஸ் ஆர் எம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 2024 25 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளின் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.