ரதசப்தமி உற்சவம் கற்பக விருஷ புறப்பாடு
திருப்பதி மலையில் நடைபெறும் ரதசப்தமி உற்சவத்தின் ஐந்தாவது வாகன புறப்பாடாக இன்று மாலை ஏழுமலையானின் கற்பக விருஷ வாகன புறப்பாடு நடைபெற்றது.
கேட்டவருக்கு கேட்டதை வழங்கும் தங்க கற்பக விருட்சத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அப்போது அருள்பாலித்தார்.
கேட்டவருக்கு கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சத்தை வாகனமாக கொண்டு அனைவருக்கும் வளங்களை வாரிக் கொடுக்கும் ஏழுமலையான் எழுந்தருளிய காட்சியை மாட வீதிகளில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.