பாடலீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத குருவார பிரதோஷ வழிபாடு
கடலூர் அருள்மிகு பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத குருவார பிரதோஷ வழிபாடு கார்த்திக் மற்றும் சேகர் குருக்கள் தலமையில் நடைபெற்றது.
கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் உள்ள பழமை வாய்ந்தஅருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாதத்தின் வியாழக்கிழமை அன்று குருவார பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது கார்த்திக் மற்றும் சேகர் குருக்கள் தலமையில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு முன்னிட்டு பால் தயிர் சந்தனம் பன்னீர் விபூதி மஞ்சள் என பல்வேறு திரவியங்களால் பாடலீஸ்வரர் மற்றும் நந்திஸ்வரி தேவிக்கு வெகு விமர்சையாக அபிஷேகம் நடைபெற்றது.
முதலில் அருள்மிகு நடராஜர் மற்றும் சிவகாமி சுந்தரிக்கு தீபாரதனையும் அதன் பின்னர் அருள்மிகு பாடலீஸ்வரர் மற்றும் நஸ்தீஸ்வரருக்கும் மஹா தீபாரதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்னிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.