in

தென்காசியில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட கருணாநிதியின் நினைவிடம்

தென்காசியில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட கருணாநிதியின் நினைவிடம்

 

அலங்கார வளைவு, சமாதி, ஒளிரும் விளக்குகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட கருணாநிதி நினைவிடத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்திக்கொண்டனர்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக-வின் மறைந்த தலைவருமான கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று திமுகவினரால் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் அமைதி பேரணி, மலர் அஞ்சலி உள்ளிட்டவைகள் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிட மாதிரியை சுரண்டை நகர் பகுதியில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் வடிவமைக்கப்பட்டது.

கலைஞரின் நினைவிடம் அமைக்கப்பட்டதை போன்று அலங்கார வளைவுகள், சமாதி, கலைஞரின் சிலை உள்ளிட்டவைகள் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார்.

இரவு நேரத்தில் விளக்குகள் வெளிச்சத்தில் மிளிரும் கருணாநிதியின் நினைவிடத்தை அப்பகுதியைத் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு டோலோஸ்தவம்

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடம் பெறாததை கண்டித்து திமுக -காங். வெளிநடப்பு