in

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவு


Watch – YouTube Click

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவு

 

சொத்து மோசடி வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவு.

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்த 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்களை வைத்து மோசடியாக வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளா மாநிலம், திருச்சூரில் கைது செய்யப்பட்டு, தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று அரசு தரப்பு வழக்கறிஞர், எதிர்தரப்பு வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர் வாதத்தை கேட்டறிந்த பிறகு தற்போது 31.07.2024 அன்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் ஜாமீன் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நாள்தோறும் காலை, மாலை என சிபிசிஐடி அலுவலகத்தில் இரண்டு வேலையும், வாங்கல் காவல் நிலையத்தில் ஒரு வேலையும் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் மற்றும் பிரவீன் உள்ளிட்டோருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர், காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் மற்றும் பிரவீன் உள்ளிட்டோர் 31.07.2024 வரை நீதிமன்ற காவலில் இருந்த நிலையில், இன்று ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா பதினாறு சக்கர சப்பரத்தில் வீதி உலா

எதிர்நீச்சல் சீரியலை….அடுத்து முடிவுக்கு வரும் டாப் SunTv சீரியல்