in

தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து பண்றாங்க


Watch – YouTube Click

தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து பண்றாங்க

ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் ரத்தினம் படம் நேற்று உலகம் முழுதும் வெளியான நிலையில் திருச்சி, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் விநியோகஸ்தர்களுக்கு பாதி தொகையை விநியோகிக்காதால் தியேட்டர்கள் ஒதுக்க மறுத்துவிட்டனர் என்று விஷால் குற்றம் சாட்டி நேற்று வலைப்பக்கத்தில் பதிவு வெளியிட்டு கூறியதாவது.

பயமும் வருத்தமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து வளர்ந்து கொண்டு இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் கொண்டுதான் வருகிறார்கள் தயாரிப்பாளர்கள் ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தில் இருப்பது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது , என்னை போன்ற போராளிகளுக்கு இது பின்னடைவு ஆனாலும் சற்று தாமதமானாலும் நீதியின் மூலம் வீழ்த்துவேன் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.

தயாரிப்பாளர்களுக்கு எதுக்காக இத்தனை சங்கங்கள் என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்.

நான் ஒரு நடிகனாகவோ நடிகர் சங்க பொது செயலாளர் ஆகவோ தயாரிப்பாளராகவோ இதை சொல்லவில்லை.

எனது படைப்பை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் ஒரு தயாரிப்பாளரின் மகனாக சொல்கிறேன் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

ராமநவமி கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக ராமர் சீதை திருக்கல்யாணம்

15 நிமிட நடிப்பிற்கு இத்தனை கோடியா வெதும்பும் தயாரிப்பாளர்