காட்டேரிக்குப்பம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமித ஸ்ரீ சுப்பிரமணி ஆலய திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாதி விழா
காட்டேரிக்குப்பம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமித ஸ்ரீ சுப்பிரமணி ஆலய திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாதி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது புதுவை மாநிலம், மண்ணாடிப்பாடு கொம்யூன், காட்டேரிக்குப்பம், புது நகரில் கோயில் கொண்டிருக்கும் கொண்டிருக்கும் அருள்மிகு சித்தி விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி ஆலய திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா முன்னிட்டு இன்று காலை 6 மணி அளவில் திருப்பள்ளியெழுச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து மூலவர்களுக்கு ஆணைந்தாட்டல் மற்றும் மூலவர்களும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து காலை ஏழு மணி அளவில் நான்காம் கால வேள்வி தொடங்கி நாடி சொன்ன நாடி சந்தானம், பூர்ண ஆகுதி, மலர் அர்ச்சனை திருமுறை விண்ணப்பம் பேரொளி வழிபாடு ஆகியவை நடைபெற்றது.
மேலும் பூஜிக்கப்பட்ட கலசங்கள் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 8:40 மணியளவில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் கருவறை விமான கலசங்களுக்கு குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாண்புமிகு புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் மூலவர்களுக்கு மகா அபிஷேகத்தைத் தொடர்ந்து கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புமிகு உள்துறை அமைச்சர். ஆ நமச்சிவாயம் அவர்களுக்கு கோயிலில் சார்பில் முதல் மரியாதை அளிக்கப்பட்டது.
விழாவிற்கான வேள்வி பணியில் சிவத்திரு அ.சிவமூர்த்தி மற்றும் கூட்டேரிப்பட்டு திருஆடல் அரசரின் சிவகன பேரிகை சிவனடியார் திருக்கூட்டம் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாட்டினை காட்டேரிக்குப்பம் ஊர் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.