in

1 கோடியில் கட்டப்படும் குரம்பு வேலை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் காட்டுப்புத்தூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.

11 கோடியில் கட்டப்படும் குரம்பு வேலை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் காட்டுப்புத்தூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.

கடந்த 90 நாட்களாக வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாய பணிகள் தேக்கம்.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் மோகனூரில் கட்டப்பட்டு வரும் குரம்பு வேலை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் முசிறி உள்ளிட்ட பகுதிகள் காவிரி டெல்டா பாசன பகுதியாக கருதப்படுகிறது காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்கள் மூலம் கரையோர பகுதிகள் பயன்பெறுகிறது.

இந்நிலையில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் விவசாய பாசனத்திற்கு போதிய அளவில் இருப்பதற்காக காவிரி ஆற்றின் பக்கவாட்டில் நிரந்தர குரம்பு அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இது குறித்து முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் சட்டசபையில் கோரிக்கை விடுத்து பேசினார். அதனைத் தொடர்ந்து நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பரிந்துரையின் பேரில் தமிழக அரசு காவிரி ஆற்றில் குரம்பு அமைப்பதற்காக தமிழக அரசு 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் காவிரி ஆற்று பகுதியில் குரம்பு அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.இந்த குரம்பு அமைப்பதால் காட்டுப்புத்தூர் பெரிய பள்ளிபாளையம் சின்ன பள்ளிபாளையம் உன்னியூர் தொட்டியம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காட்டுப்புத்தூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் பயன்பெறுவர்.

.இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என காட்டுப்புத்தூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து காட்டுப்புத்தூர் பாசன வாய்க்கால் சங்கம் நிர்வாகி சின்ன பள்ளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் கூறும்போது காவிரி ஆற்றில் குரம்பு அமைப்பதற்காக 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதே சமயம் இப்பணிகள் அமைக்கும் பணி மிக மெதுவாக நடைபெற்று வருகிறது.குரம்பு அமைக்கும் பணியில் முதல் கட்ட பணிகள் முடிவடையாததால் காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கடந்த 90 நாட்களாக காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதித்துள்ளது.

குறிப்பாக இப்பகுதி விவசாயிகள் வருட பயிர் என கூறப்படும் பணப் பயிர்கலான கரும்பு, வாழை ,கோரை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு வருடம் முழுவதும் தண்ணீர் தேவைப்படும்..கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட கரும்பு வாழை ஆகியவை தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டது.சுமார் 1000 ஏக்கர் அளவில் பாசனப்பகுதிகள் கடுமையாக பாதித்துள்ளது.நேரிடையாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குரம்பு கட்டும் பணிகளை விரைந்து முடித்து காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலுக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறினார்..இதுகுறித்து காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கூறும் போது மாயனூர் அருகே காவிரி ஆற்றில் குரங்கு அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெறுகிறது.

11 கோடி ரூபாய் திட்டப்பணியில் குறைந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.வேலை நடைபெறும் இடத்தில் அரசு பொறியாளர் இருந்து கலவையின் தரம் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.பணிகள் விரைந்து முடிக்கப்படாத காரணத்தால் காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை தோட்டம் முற்றிலும் கருகிவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார அளவில் நஷ்டமும் மன உளைச்சலும் ஏற்படுகிறது எனவே குரம்பு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். காட்டுப்புத்தூர் பகுதி பாசன வாய்க்கால் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குரம்பு அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதாக விவசாயிகள் மிகுந்த வருத்தமுடன் தெரிவிக்கின்றனர். திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திருச்சி மாவட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி மோகனூர் பகுதியில் நடைபெறும் குரம்பு அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது

What do you think?

காஞ்சி காமாட்சிக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காணிக்கை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.