கீழநாஞ்சில்நாடு ஸ்ரீ ராஜ விநாயகர் ஆலயம் ராஜ கணபதி மூஞ்சூறு வாகனத்தில் வீதி உலா
மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு ஸ்ரீ ராஜ விநாயகர் ஆலய ஐந்தாம் ஆண்டு சம்வஸ்திரா அபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் ராஜ கணபதி மூஞ்சூறு வாகனத்தில் வீதி உலா, வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து பொதுமக்கள் வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கீழநாஞ்சில் நாடு பகுதியில் பழமையான ஸ்ரீராஜகணபதி மற்றும் மன்மதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு மூலவர் ஸ்ரீராஜ கணபதிக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் திரவிய பொடி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ராஜகணபதி வீதி உலா நடைபெற்றது.
மூஞ்சூறு வாகனத்தில் உற்சவர் ராஜகணபதி வீதி உலாவாக எழுந்தருளினார்.
மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்த ராஜ கணபதிக்கு வீடுகள் தோறும் பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர்.