கேரளாவில் கஞ்சா கடத்தல் மன்னை பல கோடி கேட்டு கடத்தி அடித்து துன்புறுத்திய போது திருச்சியில் போலீசாரிடம் நைசாக தப்பிய சம்பவம்
திருச்சி திருவானைக்காவல் ட்ரங் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்(ஸ்ரீ) ஐந்து பேர் தங்கி இருந்துள்ளனர. நேற்று காவல் கட்டுப்பாட்டறைக்கு ஒரு தகவல் வருகிறது, ஒருவரை ஐந்து பேர் சேர்ந்து அடிப்பதாக தகவல் வந்ததன் பேரில் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் அந்த ஓட்டலுக்கு செல்கின்றனர். அங்கு சென்று பார்த்தபொழுது மூன்று பேர் தப்பி ஓடி விடுகின்றனர். இரண்டு பேரை ஸ்ரீரங்கம் காவல்துறையினர் பிடித்தனர்.
ஒருவர் காயத்துடன் இருப்பதால் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பிறகு இந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற சொன்னவரை காணவில்லை என தேடியுள்ளனர்.
அப்பொழுதுதான் இந்த இருவரிடம் நடத்திய விசாரணையில் கேரளா மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான ஷாஜி மோன் என்பது தப்பி ஓடியவர் என்பது தெரிய வந்துள்ளது.58 வயது நிரம்பிய ஷாஜி மோன் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.
விசாரணையில் கொடைக்கானல் பகுதியில் நிலங்களை வாங்கி வைத்திருப்பதாகவும் குத்தகைக்கு நிலங்களை வைத்திருப்பதாகவும் பிடிபட்ட தென்காசி கவிராஜா,கேரளா சேர்ந்த அன்ஷால் இருவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதுவரையும் காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தக் கடத்தலை திட்டமிட்ட திருச்சி துறையூரை சேர்ந்த சாம் சுந்தர் தலைமறைவாகியுள்ளான் . காவல்துறையினர் வந்த பொழுது ஓட்டலில் இருந்து ஓடிய கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீவத்,சரத் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த 5 பேரும் சேர்ந்து தான் ஷாஜி மோனை கடத்தி வந்து பத்து கோடி ரூபாய் பணம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உன்னை பற்றி காவல்துறையிடம் தகவல் தெரிவித்து விடுவோம் என சொல்லி மிரட்டி அடித்துள்ளனர். தற்பொழுது கஞ்சா கடத்தல் மன்னன் ஷாஜி மோனை திருச்சி மாநகர தனிப்படை தேடி வருகிறது.கேரள மாநில போலீசாரும் தேடி வருகின்றனர்.