in

கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்த கேரளா வாலிபர்கள் கைது

கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்த கேரளா வாலிபர்கள் கைது

 

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்த வழக்கில் மேலும் இரு கேரளா வாலிபர்கள் கைது.

புதுச்சேரியில் கடந்த ஜூன் 29ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனை அருகே கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்ற சேலத்தைச் சேர்ந்த, சங்கீத்குமார், சேலம் கீர்த்தி வாசன், கேரளா, பாலக்காடு, ஹைடர் 30; கண்ணூர், முகமது பாசில் 27; ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து எல்.எஸ்.டி (லைசெர்ஜித் ஆசிட் டைதலமைடு) என்ற போதை ஸ்டாம்ப் 1600, கஞ்சா 250 கிராம், கஞ்சா ஆயில் 160 மி,லி; பறிமுதல் செய்யப்பட்டு இதன் மதிப்பு 25 லட்ச ரூபாய்…

இவர்களிடம் தொடர்பு விசாரணையில் நேற்று கேரளா மலப்புரம் முகமது அஜ்மல், 26; கேரளா வயநாட்டைச் சேர்ந்த முகமது தாஹிர், 36; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் புதுச்சேரிக்கு போதை ஸ்டாம்ப் விற்பனைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்..

What do you think?

புதுச்சேரியில் 305 காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்….

தனியார் பொறியியல் கல்லூரி  பெண்கள் ஹாஸ்டல் ரகசிய கேமரா விவகாரம் மாணவ மாணவியர் தீவிர போராட்டம்