கெட்டிமேளம் சீரியல் நாயகன் மாற்றம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு கெட்டிமேளம் தொடர் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிறது.
இந்த தொடரில் பொன்வண்ணன், பிரவீனா, லட்சுமி, சாயா சிங், சௌந்தர்யா ரெட்டி, சிப்பு சூர்யன் மற்றும் விராட் ஆகியோர் நடிக்கிறார்கள்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சிவராமன் வீடு கட்டி தனது மகள்களுக்கு நன்றாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்.
தன் கனவுக்காக அவர் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி போய் கொண்டிருக்கும் நிலையில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மாற்றப்பட்டு இருக்கிறார்.
அதாவது கவின் கதாபாத்திரத்தில் நடித்த ஷங்கரே ..வுக்கு பதிலாக இனி க்ரிஸ்டி நடிக்க உள்ளாராம்.