in

கெட்வெல் ஆஞ்சநேயா் திருக்கோவில் 5008 கனிகளால் விசேஷ அலங்காரம் சிறப்பு பூஜை

கெட்வெல் ஆஞ்சநேயா் திருக்கோவில் 5008 கனிகளால் விசேஷ அலங்காரம் சிறப்பு பூஜை

 

தமிழ் புத்தாண்டான விஸ்வாவஸு ஆண்டு பிறப்பை முன்னிட்டு கெட்வெல் ஆஞ்சநேயா் திருக்கோவிலில் 5008 கனிகளால் விசேஷ அலங்காரம் சிறப்பு பூஜை. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

தமிழ் வருடமான குரோதி ஆண்டு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று விஸ்வாவஸு ஆண்டு பிறக்கிறது. இன்றைய தினம் அதிகாலையில் கண்விழித்ததும் மா, பலா, வாழை என முக்கனிகளுடன், நாணயங்களை பார்த்து, வழிபடுவதும் பாரம்பரியமாக விளங்குகிறது.

இன்றைய நாளில், கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்யப்படுகிறது. சிறப்பு அபிஷேக பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

பிறக்கும் ஒவ்வொரு புத்தாண்டும், மனிதர்களின் வாழ்வில் மேன்மையையும் பல்வேறு சிறப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதன் அடையாளமாக வாழ்த்து பரிமாற்றம், இனிப்பு பரிமாற்றம் என, மனிதர்கள் புத்தாண்டை இனிதே வரவேற்று, மகிழ்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்களில், இன்று தமிழ் புத்தாண்டான விஸ்வாவஸு ஆண்டடையொட்டி சித்திரை விசு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீகனக மகாலட்சுமி, ஸ்ரீ தன்வந்தாி, ஆஞ்சனேயா் சன்னதிகள் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் வருடந்தோறும் சித்திரை விசு நாளில்,ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, செவ்வாழை உட்பட பல்வேறு கனிகளை கொண்டு 5008 பழக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் திருக்கோயில் வளாகம் முழுவதும் பழங்களால் அலங்காிக்ப்பட்டு இருந்தது. ஸ்ரீ தன்வந்தாி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன். பக்தா்கள் நீண்ட வாிசையில் நின்று விசுக்கனி தாிசனம் செய்தனா்.

What do you think?

விநாயகரை தன் ஒளிக்கதிரால் அபிஷேகம் செய்த சூாிய பகவான்

நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை