திண்டுக்கல்லில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கந்தூரி விழாவில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவுகளை வாங்கிச் சென்றனர்.
இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு அசைன் உசேன் நினைவாக 83 ஆம் ஆண்டு மத நல்லிணக்க கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் அனுமந்த நகர், எழில்நகர்,பாலகிருஷ்ணாபுரம், மாசிலாமணிபுரம், அரசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஜாதி மத பாகுபாடின்றி நகரின் பல்வேறு பகுதியில் இருந்து அனைத்து சமுதாயத்தினரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கந்தூரி உணவுகளை வாங்கி சென்றனர். மேலும் மொகரம் பண்டிகையின் முக்கிய நிகழ்வான புலியாட்டம் ஆடி உடலில் கத்தி போடும் நிகழ்வு இன்று மாலை நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்