in

ஆரியம் மட்டுமல்ல காவியும் அலற கூடிய நிலையில் உள்ளது கி வீரமணி பேச்சு


Watch – YouTube Click

ஆரியம் மட்டுமல்ல காவியும் அலற கூடிய நிலையில் உள்ளது கி வீரமணி பேச்சு

 

தமிழக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் விழாவில் கூடியுள்ளவர்கள் தூதர்களாக (Ambassador) மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என அழைப்பு விடுத்த உதயநிதி ஸ்டாலின்.

திராவிடத்தின் ஐந்தாம் தலைமுறையை கண்டு ஆரியம் அலறக்கூடிய நிலை உள்ளது..ஆரியம் மட்டுமல்ல காவியும் அலற கூடிய நிலையில் உள்ளது…திராவிட கழக தலைவர் கி வீரமணி பேச்சு.

கடலூர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும் மாமன்ற வார்டு உறுப்பினருமான சரத்- நிவேதிதா திருமணம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.இதில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தமிழக அமைச்சர்கள்,விசிக தலைவர் திருமாவளவன், புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் உதயநிதி பேசுகையில்,முன்பு மகளிர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் இருந்தது. தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது, வேலை செய்வதாக உள்ளனர். இந்த மாற்றம் கொண்டு வந்தது திமுக தான்.

திமுக ஆட்சியில் தான் மகளிர்க்கு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் விழாவில் கூடியுள்ளவர்கள் தூதர்களாக (Ambassador) மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என அழைப்பு விடுத்தார்.

திருமண தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயர் வையுங்கள் என கூறி மணமக்களை உதயநிதி வாழ்த்தினார்.

மேடை பேச்சு…உதயநிதி ஸ்டாலின்..தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்.

அடுத்து பேசிய திராவிட கழக தலைவர் கி வீரமணி,மணமக்களுக்கு உதயநிதி அறிவுரை கூறி விட்டார். நானும் ஒரு அறிவுரை கூறுகிறேன்.நாங்கள் முதியவர்கள் என கணக்கு போட வேண்டாம்..நாங்களும் இளைஞர்கள் தான் என கூறினார்.இது நமது கொள்கை குடும்ப மணவிழா. கலைஞருக்கு இடம் பெற போராடி நீதிமன்றத்தில் வெற்றி பெற்றவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அதே போல் விளையாட்டு போட்டிக்கு இடம்பெற நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றவர் உதயநிதி.இவர்கள் மக்கள் மாமன்றத்தில் என்றும் வெற்றி பெருகிறார்கள்.

எதிர்ப்பிலேயே வளர்ந்த இயக்கம்.ஐந்தாம் தலைமுறையை கண்டு ஆரியம் அலறக்கூடிய நிலை உள்ளது..ஆரியம் மட்டுமல்ல காவியும் அலற கூடிய நிலையில் உள்ளது..

இப்போது எதிர்நீச்சலிலேயே இருக்கும் இயக்கம் இந்த திக இயக்கம். திராவிடம் வெல்லும் அதை என்றும் வரலாறு சொல்லும் என கி. வீரமணி பேசினார்..


Watch – YouTube Click

What do you think?

என் ஐ டி கல்லூரி போராட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேட்டி

புதுச்சேரி மொழியாசிரியர் கல்வி துறை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம்..