in

குட் news கொடுத்த பசங்க பட கிஷோர்

குட் news கொடுத்த பசங்க பட கிஷோர்

பாண்டிராஜின் படமான ‘பசங்க’வில் தனது அற்புதமான நடிப்பால் இதயங்களை வென்ற கிஷோர், தனது கதாபாத்திரத்திற்காக தேசிய விருதை வென்றார். பின்னர் ‘துரோஹி’, ‘கோலி சோடா’, ‘வஜ்ரம்’, ‘நெடுஞ்சாலை’ மற்றும் ‘ஹவுஸ் ஓனர்’ போன்ற படங்களில் நடித்தவர் சில ஆண்டுகள் சினிமா..வுக்கு பிரேக் கொடுத்து படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட வானத்தைப்போல என்ற சீரியலில் நடித்த பிரீத்தியை காதலிப்பதாக கூறி திடீரென்று திருமண தேதியை அறிவித்தார்.

கிஷோர் ப்ரீத்தி விட நான்கு வயது இளையவர் என்பதால் இவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் அதன்பிறகு பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். வயது வித்தியாசம்’ குறித்து பல விமர்சனங்கள் எழுந்த போது ,தனது திருமணம் குறித்து பேசிய கிஷோர், பிரீத்தியுடனான தனது திருமணம் இரு குடும்பத்தினரின் முழு ஆதரவு மற்றும் “ஒப்புதலுடன்” நடத்தப்பட்டது, வயது என்பது வெறும் ஒரு எண். வயதைப் பற்றிப் பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். எனக்குக் கிடைத்த பெண் போல உங்களுக்குப் கிடைத்தால், நீங்கள் நிச்சயமாக இப்படிப் பேச மாட்டீர்கள்.” என்று கூறி வாயடைத்தார் கிஷோர் தற்பொழுது ஒரு சில வெப் சீரியஸ்கலில் பிஸி..யாக இருக்கிறார் கோலிசோடா ரைசிங் என்ற வெப் சீரிஸ் ott தளத்தில் வெளியாகிய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த காதல் தம்பதிகள் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லியிருக்கிறார்கள் அதாவது விரைவில் பெற்றோர் ஆக போகிற இவர்களூக்கு congratulation cute couple என்று ரசிகர்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

பிரபல நடிகர் மறைவு

மொக்கை வாங்கிய எதிர்நீச்சல் டு…. SUN TV எடுத்த அதிரடி முடிவு