in

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசு இதுவரை என்ன சரியாக செய்திருக்கிறது கேஎம் காதர் மொகிதீன் பேட்டி

விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு தனக்கு வேண்டியவர்களுக்கு தான் அத்தனையும் செய்து வருகிறது, மத்திய அரசு திராவிட ஆட்சி அரசுக்கு செய்துவரும் எல்லா வகையான இடையூறுகளில் ஒன்றாக இதுவும் இருக்கும் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

திருப்பரங்குன்றத்தில் உள்ள மக்கள் நூற்றாண்டு காலமாக அமைதியாக எந்த பிரச்சனையும் இன்றி நிம்மதியாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர், சிலர் வெளியே இருந்து சென்று பிரச்சனை செய்கின்றனர் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

மதுரை உத்தங்குடி பகுதியில் இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது, மாநில முக்கிய நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல நிர்வாகிகள் பொதுக்குழுவில் பங்கேற்றனர்.

பொதுக்குழு வாயிலாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கட்சியின் தேசிய தலைவர் அவர் காதர் மொகிதீன் பத்திரிகையாளர்களை சந்தித்துக் கூறும் போது,

இஸ்லாமிய சமுதாயத்தினர்களுக்கு இதுவரை 3.5% சதவீத இட ஒதுக்கீடு கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது அதை சதவீதம் 5.4% ஆக உயர்த்த வேண்டும்.காயிதே மில்லத் அவர்கள் பெயரால் அரபு தமிழ் ஒப்பாய்வு பல்கலைக்கழகம் உருவாகி தர வேண்டும்.தமிழ்நாட்டில் உருது பேசும் மக்களுக்காக உருது பேசும் பயிற்சி ஆசிரியர் கல்வி அமைத்து தர வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இங்கு உள்ள மக்களிடையே எந்த பிரச்சனையும் இல்லை, இந்து முஸ்லிம் அனைவரும் அண்ணன் தம்பியாக பழகி வாழ்ந்து வருகிறோம். தர்கா என்பது திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான தர்காக்கள் உள்ளது.

ஒவ்வொரு தர்காக்களிலும் அனைத்து சமுதாயத்தினரும் சென்று நேர்த்தி கடன் செலுத்தி ஆடு, கோழிகளை பலியிடுவது வழக்கமான ஒன்று அதை இஸ்லாமியர்களும் மற்ற சமுதாயத்தினர் யாரும் பெரிது படுத்துவதில்லை, கண்டு கொள்வதில்லை அது காலம் காலமாக நடந்து கொண்டிருந்தது அப்படிதான் திருப்பரங்குன்றத்திலும் நடந்தது தற்போது அதை மாற்ற வேண்டும் நிறுத்த வேண்டும் என சிலர் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். அங்கே உள்ள 6 சமுதாயத்தை சேர்ந்த மக்களும் ஒன்று சேர்ந்து இங்கே கோழி அறுக்க கூடாது என்று சொன்னார்களா?

திருப்பரங்குன்றத்தில் உள்ள மக்கள் நூற்றாண்டு காலமாக அமைதியாக எந்த பிரச்சனையும் இன்றி நிம்மதியாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர், சிலர் வெளியே இருந்தும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து அங்கே சென்று பிரச்சனை செய்கின்றனர்.

தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றமும் தெளிவாக அதை கூறியுள்ளது இங்கு அனைவரும் சகோதரராக உள்ளனர் அவர்களை யார் பிரிக்க நினைத்தாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

திமுகவுடன் கூட்டணி தொடருமா குறித்த கேள்விக்கு

அரசியல் காரணத்துக்காக மட்டும் திமுகவுடன் இந்திய முஸ்லிம்களின் கூட்டணி வைக்கவில்லை எம்.எல்.ஏ , எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணியில் இல்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் யாதும் ஊரே யாவரும் கேளிர் பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது . குரான், நபிகள் சொன்னதை திமுக ஏற்றுள்ளதால் அவர்களுடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்றும் நாங்கள் திமுக கூட்டணி தான். எங்கள் கொள்கையும் அவர்கள் கொள்கையும் ஒரே கொள்கை அதனால்தான் கூட்டணியில் இன்றளவும் இருக்கிறோம் ஒரே ஒத்த சிந்தனை கொண்ட கட்சிகள் நாங்கள் .

விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு குறித்த கேள்விக்கு

விஜய் கட்சி ஆரம்பித்து நல்லா வரட்டும், தமிழ்நாட்டில் யார் வேண்டுமானால் கட்சி ஆரம்பிக்கலாம் நாட்டில் 3000 அரசியல் கட்சிகள் உள்ளன அந்த அடிப்படையில் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார் அரசியலில் வந்து மக்களுக்கு சேவை வருகிற யாரையும் தடுக்கக் கூடாது நாங்கள் விஜயை வரவேற்கிறோம்.

மத்திய அரசு செய்வதெல்லாம் தவறு தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசு இதுவரை என்ன சரியாக செய்திருக்கிறது எதையுமே சரியாக செய்யவில்லை.

மத்திய அரசு தனக்கு வேண்டியவர்களுக்கு தான் அத்தனையும் செய்து வருகிறது. வருமான வரி, ஈடி போன்றவற்றை ஏவி விட்டு மத்திய அரசுதான் இடையூறு செய்கிறது மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு திராவிட ஆட்சிக்கும் அரசுக்கும் செய்துவரும் எல்லா வகையான இடையூறாக இதுவும் இருக்கும் அதே போல தான் இதையும் நினைக்கிறேன் என்றார்.

What do you think?

பா ஜ க ஆளும் மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை

மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க வேண்டாம் மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி