கனிமொழி சொத்து மதிப்பு தெரியுமா?
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனது பெயரில் ரொக்க பணம், வங்கி கையிருப்பு, பங்குகள், பத்திரங்கள், நகைகள், கார்கள் என மொத்தம் ரூ.38 கோடியே 77 லட்சத்து 79 ஆயிரத்து 177 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், கட்டிடங்கள், வீடுகள் என ரூ.18 கோடியே 54 லட்சத்து 42,000 மதிப்பிலான அசையா சொத்துக்களும் ஆக மொத்தமாக ரூ.57 கோடியே 32 லட்சத்து 21 ஆயிரத்து 177 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் தனது கணவர் கோ.அரவிந்தன் பெயரில் ரொக்க பணம், வங்கி கையிருப்பு, பத்திரங்கள், கார் என மொத்தம் ரூ.66 லட்சத்து 21 ஆயிரத்து 347 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், வணிக கட்டிடம், வீடு என ரூ.2 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 550 மதிப்பிலான அசையா சொத்துக்களும் ஆக மொத்தமாக ரூ.2கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 897 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாக கனிமொழி தனது பிரமான பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
தன் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் தொடரப்பட்ட இரு வழக்குகளிலும் சிறப்பு நீதிமன்றம் தன்னை விடுதலை செய்துள்ளதாகவும், இதனை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. இதில் சிபிஐ மனுவுக்கு உயர்நீதிமன்றம் 22.03.2024-ல் அனுமதி அளித்துள்ளது. அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என கனிமொழி தனது பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.