in

கொடைக்கானல் மலையில் காட்டுத்தீ புகை மண்டலமாக காட்சியளிக்கும் மலை கிராமங்கள்


Watch – YouTube Click

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர் , பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ 100 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் பற்றி எரிந்து வருவதால் புகை மண்டலமாக காட்சியளிப்பு…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும் தற்போது கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வந்த நிலையில் இன்று கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட கிராமங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களிலும் 100 ஏக்கர் பரப்புக்கு மேலாக உள்ள இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நேற்று துவங்கிய காட்டுத் தீ இன்று மளமளவென பரவி எரிந்து வருகிறது. தொடர்ந்து எரிந்து வரக்கூடிய காட்டுத்தீயின் காரணமாக புகைமண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. மேல்மலை கிராமங்களில் உள்ள வனப் பகுதிகள் மேலும் வனப்பகுதியில் இருக்கக்கூடிய வன விலங்குகளும் இந்தப் பகுதியை விட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் காட்டுத்தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடிய வாய்ப்பு இல்லை என்றும் தெரிகிறது மேலும் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கடும் புகை மண்டலத்தால் புகைமண்டலம் சூழ்ந்தவாறு சாலைகளை கடக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

குடிபோதையில் கலாட்டா செய்த மகனை தந்தை, தம்பி ஆகியோர் கொலை செய்து வயலில் வீசினர்

நண்பர்களுடன் சென்ற கார்பாலத்துக்குள் கவிழ்ந்து விபத்து