in

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் திருத்தேரோட்டம்


Watch – YouTube Click

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் திருத்தேரோட்டம்

 

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பழமை வாய்ந்த பூம்பாறை குழந்தை அருள்மிகு வேலப்பர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக சிறப்பாக நடைபெறும்.

இந்த நிலையில் கடந்த வாரம் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதில் சிறப்பம்சமாக மலைத்தெருக்களில் இரு வடம் பிடித்து இழுக்கப்படும் தேர்த்திருவிழா நடைபெற்றது. குழந்தை வேலப்பர் கோவில் சுற்றுச்சாலையில் பக்தர்கள் இருவடம் பிடித்து தேரை பரவசத்துடன் இழுத்து சென்றும், சாலையில் பக்தி பரவசத்துடன் அங்க பிரதட்சணம் செய்தும் மக்கள் குழந்தை வேலப்பரை வழிபட்டனர்.

பூம்பாறை மக்கள் குழந்தை வேலப்பர் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். வான வேடிக்கைகளில் முழங்க வண்ண வண்ண விளக்குகள் ஒளிர பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காணும் வகையில் பிரமிக்க வைக்கும் அளவில் இருந்தது.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Watch – YouTube Click

What do you think?

இளைஞர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் முற்றுகை 50க்கும் மேற்பட்டோர் கைது

முந்திரி பருப்பு கடையை அபகரித்த மாணவன் உடந்தையாக இருந்த ஆய்வாளரைக கண்டித்து போராட்டம்