கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோவில் தேரோட்டம்
கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோவில் உள்ளது.
இக்கோவில் குழந்தை வேலப்பர் முருகன் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
தைப்பூசத்தையொட்டி பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் துவங்கி தினசரி இக்கோவிலில் உள்ள முருகன் பல்வேறு வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூச திருநாளின் சிறப்பம்சமாக இரு புறமும் வடம் கொண்ட திருத்தேரில் வள்ளி தெய்வானையுடன் முருகன் வலம் வரும் நிகழ்வு 7-வது நாளில் நடைபெற்றது.
முன்னதாக பேரில் சக்கரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங்காய் உடைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் வள்ளி தெய்வானையுடன் முருகன் புறப்படும் முன் விநாயகர் சப்பரத்தில்பவணியாக புறப்பட்ட பின் குழந்தை வேலப்பர் முருகனின் திருத்தேர் புறப்பட்டது.
இந்நிகழ்வில் பழனிசட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஐ பி செந்தில்குமார், கொடைக்கானல் நார்பன்ற தலைவர் செல்லத்துரை துணைத்தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் முகமது இப்ராகிம் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு குழந்தை வேலப்பரை தரிசித்து சென்றனர்.