in

கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் பங்குனி சுவாதி பெருவிழா

கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் பங்குனி சுவாதி பெருவிழா

 

கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் பங்குனி சுவாதி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் அமைந்துள்ள தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி சுவாதி பெருவிழா முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வெட்டுடையார் காளியம்மன் நீதி தேவதையாக அருள் பாலித்து வருகிறார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு விழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் உடன் துவங்கியது முன்னதாக கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை நடைபெற்று அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் அம்மன் வாகனமான சிங்கம் உருவம் வரையப்பட்ட கொடி வஸ்திரத்தை வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்களால் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து கொடி மரத்திற்கு பட்டு சேலை பூ மாலைகள் தர்பை புல் சாற்றி சிறப்பு அலங்காரம் நடைபெற்றன பின்னர் பால் மஞ்சள் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று நிறைவாக கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து கோடி தீபம் கும்ப தீபம் நாகதீபம் மற்றும் ஷோடச உபச்சாரங்கள் நடைபெற்று உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

நிறைவாக மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெட்டுடையார் காளியம்மனை வழிபட்டனர் 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் உற்சவர் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு தேரோட்ட வைபவம் வருகிற ஏழாம் தேதி மற்றும் ஊஞ்சல் உற்சவம் தீர்த்தவாரி ஒன்பதாம் தேதி அன்றும் நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து இக்கோவிலில் வழிபட்டு செல்கின்றனர்.

What do you think?

ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

நாமக்கல் அடுத்தசேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் மாசி மக தேர்த்திருவிழா பெருமாள் திருக்கல்யாண வைபவம்