கொங்கராம்பூண்டி ஸ்ரீ அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய அக்னிவசந்த விழா
கொங்கராம்பூண்டி ஸ்ரீ அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா என்னும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கொங்கராம்பூண்டி கிராமத்தில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னிவசந்த விழா எனும் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 05-07 2024 அன்று கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது.
மேலும் 07-07 2024 முதல் 1 முதல் 10 நாள் வரை விழா உபயதாரர்கள் ஏற்பாட்டின் பேரில் தினமும் அபிஷேகம் சுவாமி வீதி உலா, வானவேடிக்கை மற்றும் கலைநிகழ்ச்சிகள் அன்னதானம் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய திருவிழாவான அக்னி வசந்த விழா என்னும் தீமிதி திருவிழாவை முன்னிட்டு மதியம் அரமனுக்கு சாதம் மறைத்தல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து துரியோதனன் படுகளமும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும் மாலை 6 மணி அளவில் மூலவர் ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு பூங்கரகம் கோயிலில் வலம் வந்து தீமிதி திடலை அடைந்தது. தொடர்ந்து துரோபதி அம்மனுக்கு மடிசாத்தல் என்னும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பூங்கரகம் முதலில் தீ கொண்டத்தில் இறங்க அதனைத் தொடர்ந்து விரதம் இருந்து ஆண் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதில் தென்புத்தூர் சுற்று வட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா மற்றும் திமுக தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.