in

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் – பூவனநாத சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா திருக்கல்யாணம்

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் – பூவனநாத சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா திருக்கல்யாணம்

 

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் – பூவனநாத சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் மயில்வாகனத்தில் திருவீதி உலா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாத சுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த ஆறு நாட்களாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்கார வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.‌

கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சுப்பிரமணியசாமி திருக்கல்யாண வைபவம் ஆலய வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண கோலத்தில் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

இதை தொடர்ந்து 16 வகை சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஓம குண்டம் வளர்க்கப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் நிகழ்ச்சி பெண்ணைமாப்பிளைக்கு தாரை வாா்த்துக் கொடுக்கும் நிகழ்வு திருமாங்கலய்ம் பூஜித்தல் என திருமண சடங்குகள் நடைபெற்றன.

முன்னதாக மூலவா் சுப்பிரமணியசுவாமி சன்னதியிலும் திருமண சடங்குகள் நடைபெற்று திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. தொடா்நது பக்தா்களின் வெற்றிவேல் முருகா கோஷங்களுடன் மாங்கல்யதார வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது . அதனை தொடா்ந்து பாலும் பழமும் கொடுத்தல் திருஷ்டி சுற்றி போடுதல் நடைபெற்று மகா தீபாராதனைகள் நடைபெற்றது.

இந்த திருக்கல்யாண வைபவத்தை திரளான பக்தர்கள் தாிசனம் செய்தனா். பின்னா் மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியா் வீதி புறப்பாடு நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

What do you think?

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது

விலாவில் மரக் கட்டையால்..தாக்கபட்ட நடிகர் சுனில் ஷெட்டி