in

ரணம் பட இயக்குனரின் படத்தில் ஹீரோ…வாக KPY பாலா


Watch – YouTube Click

ரணம் பட இயக்குனரின் படத்தில் ஹீரோ…வாக KPY பாலா

 

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சி மூலம் அறிமுகமாக அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கே. பி. ஒய். பாலா.

இவரது தனித்துவமே டைமிங் காமெடி தான் இவர் தற்பொழுது பல தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேட்ரு அதன் மூலம் வரும் பணத்தில் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

ஏற்கனவே மலைவாழ் கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் கொடுத்தார், ஆதரவற்ற பெண்களுக்கு நடிகர் லாரன்ஸ்…சுடன் இணைந்து ஆட்டோ வழங்கினார்.

அண்மையில் காது கேட்காத குழந்தைகளுக்கு ஹியரிங் Aid வாங்கி கொடுத்தார். இவர் செய்யும் நலதிட்டதிற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தாலும், தான் செய்யும் உதவிகளை இன்டாவில் பதிவிடுவதற்கு காரணம் பெயருக்காகவோ பெருமைக்காகவோ அல்ல என்னை பார்த்து பலருக்கும் இந்த ஈகை குணம் வரவேண்டும் என்று தான் இன்ஸ்டால் பதிவிடுகிறேன்.

மேலும் எனது போஸ்டை பார்த்து பலரும் என்னுடன் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு உதவி புரிகிறார்கள் அவர்களுக்கு நன்றி, என்று பாலா கூறினார்.

சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருந்த பாலாவுக்கு தற்பொழுது வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

ரணம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்று தனது இன்ஸ்டாவில் போஸ்ட் வெளியிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

ஃப்ரீ புக்கிங்கில் வேட்டையாடும் வேட்டையன்

எஸ்பி பாலசுப்பிரமணியம் சாலை…கௌரவித்த, முதலமைச்சர் மு க ஸ்டாலின்