மராட்டிய மன்னர் காலத்தில் இருந்து மாரியம்மன் கோவிலில் மட்டுமே கிடைக்கும் குச்சி முறுக்கு
மராட்டிய மன்னர் காலத்தில் இருந்து இன்று வரை தஞ்சை மாரியம்மன் கோவிலில் மட்டுமே கிடைக்கும் குச்சி முறுக்கு…
சோழர்களுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டியர்களில் ஒருவரான வெங்கோஜி மகாராஜா சத்ரபதி என்பவர் திருச்சி சமயபுரத்திற்குச் பாதையாத்திரையாக சென்று அங்குள்ள மாரியம்மனை தரிசித்தார். அன்று இரவு மன்னரின் கனவில் தோன்றிய அம்மன் தஞ்சைக்கு கிழக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் புன்னைக்காட்டில் தான் வசித்து வருவதாகவும் தன்னை வந்து வணங்கும் படி மன்னரின் கனவில் தோன்றி மறைந்தாள் அம்மன்.
தஞ்சைக்கு திரும்பிய மன்னர் முதல் வேலையாக புன்னைநல்லூருக்கு வந்து அம்மனுக்கு குடில் ஒன்றை அமைத்து வழிபட்டார். அதனைத் தொடர்ந்து ஆட்சி புரிந்த துளஜா மகாராஜா குடும்பத்தினரோடு அம்மனை தரிசித்தபோது மன்னனின் மகள் மேல் விழுந்த பூ தானாக மறைந்துள்ளது.
அம்மனின் மகிமையை உணர்ந்த மன்னர் கோவிலை கட்டும் பணிகளை துவங்கினார். கோவில் கட்டுமான பணியின் போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். தொழிலாளர்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்க அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் புட்டு செய்து தொழிலாளர்களுக்கு அளித்து வந்துள்ளார்.
தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு பொட்டு தான் காரணம் என அறிந்த மன்னர். பாட்டியிடம் புட்டு வாங்கி உண்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மன்னர் தான் தன்னிடம் புட்டு வாங்கி உண்டு வருகிறார் என அறிந்த அந்த மூதாட்டி மன்னருக்காக சற்று மாறுபட்ட சிற்றுண்டியை வழங்கலாம் என பச்சரிசி மாவில் உப்பு போட்டு மோதிர சைஸில் தயாரான குச்சி முறுக்கை தொழிலாளர்களுக்கும் அளித்து வந்துள்ளார். இதனை உண்ட மன்னர் புட்டை விட இது அருமையாக இருக்கிறது. நான் இந்நாட்டு மன்னன் நான் சொல்கிறேன் இனி நீ முறுக்குதான் சுட வேண்டும். என உத்தரவிட்டார்.
அன்று முதல் சுடப்பட்ட மோதிர முறுக்கை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அன்றிலிருந்து இன்று வரை மன்னர் சொன்ன அந்தக் கட்டளையை மீறாமல் இன்றளவும் இந்த முறுக்கு மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புன்னைநல்லூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த முறுக்கு தொழில் மட்டுமே அவர்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வருகிறது.