in

திருவெண்காட்டில் இலவச பயிற்சி அளிக்கும் இயற்கை விவசாயி காசி ராமனுக்கு பாராட்டுக்கள்

திருவெண்காட்டில் இலவச பயிற்சி அளிக்கும் இயற்கை விவசாயி காசி ராமனுக்கு பாராட்டுக்கள்

 

திருவெண்காட்டில் பாரம்பரியமான மண்பாண்டம் செய்தல் இரும்பில் கொள்ளு பட்டறை தொழில் ஆகியவற்றை அழிவிலிருந்து மீட்க இலவச பயிற்சி அளிக்கும் இயற்கை விவசாயி காசி ராமனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் வாசிப்பவர் காசிராமன் இவர் இயற்கை விவசாயியாக இருந்து வருகிறார். இவரது தந்தை கிட்டு ஐயா மரபு வாழ்வியலை பின்பற்றி 99 வயது வரை வாழ்ந்து மறைந்துள்ளார். தந்தையின் நினைவை போற்றும் வகையில் காசிராமன் தனது வீட்டின் முன்பு தந்தை கிட்டு அய்யாவின் மார்பளவு சிலையை அமைத்து வழிபட்டு வருகிறார்.

காசிராமன் இயற்கையின் மீது கொண்ட பற்றாள் மூலிகைகளை அழிவிலிருந்து காக்க மூலிகை தோட்டங்களை அமைத்து பராமரித்து வருகிறார். மேலும் பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இதேபோல் இயற்கையான முறையில் விளைவித்த கடலை எள் தேங்காய் போன்றவற்றை பயன்படுத்தி செக்கு மூலம் எண்ணெய் ஆடி விற்பனை செய்து வருகிறார்.

இயற்கை முறையில் மரபு வழியில் சிமெண்ட் இல்லாமல் சுண்ணாம்பு கலவையை பயன்படுத்தி வீடு கட்டி அதன் மூலம் அனைவரும் வீடு கட்ட முன்வர வேண்டுமென பயிற்சி அளித்து வருகிறார். மேலும் பொதுமக்கள் நல்ல குடிநீர் அருந்த வேண்டும் என்பதற்காக மழை நீரை சேமித்து அந்த நிறை இலவசமாக வழங்கி வருகிறார். பாரம்பரிய நாட்டு ரக மாடுகளை மீட்டெடுக்கும் வகையில் நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். விவசாயி காசிராமன் இயற்கையோடு வாழ்ந்து முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய பொருட்களை மீட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருவெண்காட்டில் மண்பாண்டம் தொழில் அழிவிலிருந்து காப்பாற்றும் வகையில் மண்பாண்ட தொழிலாளர்களை வைத்து இளைஞர்களுக்கு மண்பாண்டம் தொழில் செய்வது குறித்து பானை சட்டி போன்ற பொருட்களை செய்து. இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.

இதேபோல் கொள்ளு பட்டறை அழிவிலிருந்து காப்பாற்றும் வகையில் கொள்ளு பட்டறை வைத்து அருவாள், கத்தி, மம்பட்டி, கோடாலி, உள்ளிட்ட பொருட்கள் செய்வது குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இருக்கும் வரை நம் முன்னோர்கள் விட்டு சென்ற பாரம்பரிய பொருட்கள் தொழில்கள் மூலிகை செடிகள், மூலிகை மரங்கள் ஆகியவற்றை மீட்டு எடுப்பது இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்து இயற்கையை காப்பாற்றினால் இயற்கை நம்மை காப்பாற்றும் என விவசாயி காசிராமன் தெரிவித்துள்ளார்.

விவசாயி காசிராமன் இயற்கை மீது கொண்டுள்ள ஆர்வத்தையும் இயற்கை விவசாயம் செய்வதையும் மூலிகை தோட்டம் அமைத்திருப்பதையும் நாட்டு இன மாடுகள் வளர்ப்பையும் பலரும் வந்து பார்த்து மகிழ்ந்து செல்கின்றன.

பார்த்து செல்வதோடு மட்டுமல்லாமல் தாங்களும் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய தொழிலை செய்யவும் பாரம்பரிய பொருட்களை மீட்கவும் முயற்சி செய்வோம் என தெரிவித்து செல்கின்றன. பாரம்பரிய பொருட்கள் பாரம்பரிய தொழிலை மீட்டெடுக்க பயிற்சி அளித்துவரும் இயற்கை விவசாயி காசிராமனின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழர்களின் வாழ்வோடு இணைந்த பண்டைய தொழில் முறைகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். அதுமட்டுமன்றி கிராமப்புற பெண்களின் வாழ்க்கை முன்னேறுவதற்காக இலவச தையல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி பெண்கள் பயிற்சி பெற்று சுய தொழில் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது பிரிட்டன் தமிழ் செய்திகளுக்காக திருவெண்காட்டில் இருந்து செய்தியாளர் தாரிக் கனி.

What do you think?

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் கார்த்திகைமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கோடி தீபம், கருட சேவை

அமரன் படக்குழு மீது பொறியியல் மாணவர் வழக்கு … ஒரு கோடி இழப்பீடு வேண்டும்