உறவுகளுக்காக போராடும் நடுத்தர குடும்பஸ்தன்…. Movie Review
எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஷ் காளிதாஸ் சுவாமி இயக்கத்தில் வெளியான குடும்பஸ்தன் குடும்பங்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
இயக்குனர்கள் பிரம்பாண்டத்தை நம்பலாம் எங்க சாய்ஸ் போதுமே கதை தாங்க…இன்னு ரசிகர்கள் நிருபித்திருகிரார்கள். மணிகண்டன் கதாநாயகனாகவும் சான்வே மேகானா கதாநாயகியாகவும், பிரசன்னா பாலச்சந்திரன், ஆர் சுந்தரராஜன், நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
எதார்த்தமான கதைகளுக்கு மக்களின் ஆதரவு எப்பொழுதுமே உண்டு. குடும்பஸ்தனான நவீனின் (மணிகண்டன்) வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட எளிமையான படம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞன் குடும்பத்தினரின் எதிர்ப்புகளை மீறி தான் காதலிக்கும் பெண்ணை(வெண்ணிலாவை) திருமணம் செய்து கொள்கிறார்.
வெண்ணிலாவை அவமதிக்கும் குடும்பம், வெண்ணிலாவுக்கு வீட்டில் மரியாதை கிடைக்க வேண்டும் என்று மணிகண்டனும் வலியுறுத்தவில்லை, ஏனென்றால் அவன் ஒரு குடும்பஸ்தன்.
வீட்டை கட்ட சொல்லும் தந்தை கோவிலுக்கு சுற்று பயணம் செல்ல ஆசைப்படும் தாய், IAS தேர்வுக்கு படிக்கும் மனைவி என அனைத்து சுமக்களையும் தன் மேல் சுமந்து ஓடிகிறார் நாயகன் .
மற்றவர்கள் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வைராகியமாக இருக்கும் இளைஞனுக்கு திடீரென்று வேலை பறிபோனது கடன் வாங்கி குடும்ப சுமைகளை யாருக்கும் தெரியாமல் சுமக்கிறார், உண்மை தெரிய வரும் பொழுது பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார், குடும்பத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே குடும்பஸ்தன் கதை.
நடுத்தர குடும்பத்தின் வலிகலையும் சுமைகளையும் அழகாய் எடுத்துக் கூறியிருக்கிறார் இயக்குனர். எல்லோருமே கச்சிதமாக தனது கதாபாத்திரத்திற்குள் பொருந்தி இருக்கிறார்கள். அப்பாவாக ஆர் சுந்தரராஜன், பிரசன்ன பாலச்சந்திரன் மட்டும் ஜென்சன் திவாகர் காமெடி கலகலப்பாக இருக்கிறது.
வெண்ணிலாவாக வரும் சான்வே மேகானா, பார்ப்பதற்கு அழகாக மட்டும் அல்ல . அற்புதமான நடிப்பையும் வெளிப்படுத்திஇருக்கிறார். குடும்பஸ்தனில் நகைச்சுவை தான் அதன் மிகப்பெரிய சொத்து. எல்லோரும் ஒன்றாக இணைந்து தூக்கி நிறுத்திய குடும்பஸ்தன் பாரத்தை நிச்சயம் கண்டு களிக்கலாம், ரசிகர்களின் ஆதரவு இப்படத்திற்கு மாபெரும் வெற்றியை கொடுத்து இருக்கிறது. நல்ல படத்தை என்றும் ரசிகர்கள் அங்கரிக்க தவறுவதில்லை என்று குடும்பஸ்தன் நிரூபித்திருக்கிறது.