கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரத்திற்கு கும்பாபிஷேக விழா
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரத்திற்கு கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் நமச்சிவாயா கோசத்துடன் சுவாமி தரிசனம்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கொடிமரம் பழுதடைந்து அதன் தொடர்ச்சியாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது இந்நிலையில் கடந்த வாரம் கொடிமரம் நடப்பட்டது.
அதை தொடர்ச்சியாக கொடி மரத்திற்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் சிவாச்சாரியார்கள் இணைந்து பிரத்யேக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக யாக வேள்வி நடைபெற்றது.
பின்னர் யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசங்களை ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் மேல தாளங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு ஆலயம் வளம் வந்தனர். அதன் தொடர்ச்சியாக புதிதாக நிறுவப்பட்டுள்ள கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் கொடி மரத்திற்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து சந்தன பொட்டிட்டு, உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கொடிமர கும்பாபிஷேக விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் .
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.