பழனி தண்டயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலான பழமை வாய்ந்த அருள்மிகு வேணுகோபால் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உப கோவிலான அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்து வந்த இந்த திருக்கோவில் புனரமைக்கப்பட்டு புதிதாக நிர்மானம் செய்யப்பட்டது.
திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை 5மணிக்கு முதல் கால வேள்வியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை மங்கள இசையுடன் இரண்டாம் கால வேள்வி துவங்கியது. தொடர்ந்து தீபத்திருமகள் வழிபாடு திருவிளக்கு ஏற்றுதல் வேண்டுதல் விண்ணப்பம் இறைவணக்கம் கணபதி வழிபாடு புனித நீர் வழிபாடு ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் திருக்கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நான் வரை ஓதுதல் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் நடைபெற்றது.
தொடர்ந்து பபக்தர்களுக்கு அன்னதானமும் தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.