in ,

நாமக்கல் பரமத்தி வேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நாமக்கல் பரமத்தி வேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகாமாரியம்மனை வழிபட்டு சென்றனர்.

கும்பாபிஷே விழா பரமத்திவேலூர் சுற்றுவட்டார எட்டுப்பட்டி கிராம மக்களின் நம்பிக்கை தெய்வமாக விளங்கும் ஶ்ரீ மகமாரியமனுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது மூலஸ்தானம், கோபுரம் பரிவார தெய்வ கோபுரங்கள் மற்றும் அம்மனுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

கும்பாபிஷேக விழாவையொட்டி வரும் 4-ம் தேதி புதன்கிழமை இரவு கிராம சாந்தியுடன் விழா தொடங்குகிறது.5-ஆம் தேதி வியாழக்கிழமை அனுமதி பெறுதல், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.

ஆறாம் தேதி முளைப்பாரி எடுத்து வருதல் முதற்கால யாக பூஜை நடைபெற்றது
7-ஆம் தேதி சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும் மாலை மூன்றாம் கால யாக பூஜையும், நான்காம் கல யாக பூஜையும் தொடர்ந்து மாலை கோபுர கலசம் வைத்தல், கண் திறப்பு நிகழ்ச்சியும் இரவு திருமுறை பாராயணம், வேத பாராயணம், மூல மந்திரங்களுடன் ஐந்தாம் கால யாக பூஜையும், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகம் முக்கிய நிகழ்வான 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆறாம் கால யாக பூஜையும் தொடர்ந்து யாகசாலைக்கு பூர்ணா கதி நடைபெற்றது அதன் பின்னர் கரகம் புறப்பாடு நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேக விழா காலை 10.30 முதல் 11 மணிக்குள் மூலஸ்தான கோபுரத்துக்கு நடைபெற்றது. இதன் பின்னர் செல்வ விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெற்றது அப்பொழுது எட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி பரவசத்துடன் கொசமிட்டு வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து மூலஸ்தானம் மாரியம்மன், செல்வ விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர் சுவாமி ஆகிய சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது வணங்கி வழிபட்டுச் சென்றனர் அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை எட்டுப்பட்டி தர்மகர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

What do you think?

நாமக்கல் நந்தவனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ தசாவதார அலங்காரத்தில் அருள் பாலித்த கணபதிகள்

நாமக்கல்லில் கருட பஞ்சமி விழா சேந்தமங்கலம் நாராயண பெருமாள் திருக்கோயில் 15 ஆம் ஆண்டு பால் குட ஊர்வலம் அபிஷேகம்