in

அருண்மொழித்தேவன் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேகம்

அருண்மொழித்தேவன் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேகம்

 

மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் கிராமத்தில் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, யாகசாலைகள் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வேதியர்கள் மந்திரம் ஓத கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் அருகில் ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ மகா சாஸ்தா ஆலயம் ஸ்ரீ பீடாபகாரி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் கும்பாபிஷேகங்களும் சிறப்பாக நடைபெற்றது.

What do you think?

மலையாள சினிமா உலகில் வீசும் சூறாவளி …. பல நடிகர்கள் சிக்குவார்களா?

தாபல் சேவையை வழங்கும் ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூட ரயில்வே நிர்வாகம் முயற்சி