புவனகிரியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்
புவனகிரியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் தின விழாவை முன்னிட்டு ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு ஏக தின இலட்சார்ச்சனை நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்துடன் மகா யாக பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமாக லட்சார்ச்சனை நடைபெற்றது.
10 சிவாச்சாரியார்கள் கொண்ட குழுவினர் அம்மன் சன்னதி முன்பு லட்சம் முறை வேத மந்திரங்கள் முழங்கி அர்ச்சனை செய்தனர். பின்னர் மஹா தீபாராதனை காட்டப்பட்டது பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.