24 ஆண்டுகளுக்கு பிறகுவழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்
வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது, தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் இந்து அறநிலைய ஆட்சித் தலைக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இளங்கிளை நாயகி உடனுறை ஸ்ரீ கீர்த்திவாசர் ஆலயம் அமைந்துள்ளது வீரட்டேஸ்வரர் ஆலயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும்.
இந்த ஆலயம் தாருகாவனத்து முனிவர்கள் செருக்கை அடக்கி அவர்களால் ஏவி விடப்பட்ட யானை வடிவிலான அசுரனின் ஆடையாக இறைவன் அணிந்ததாக புராண வரலாறு தெரிவிக்கின்றது.
இதனால் அஷ்ட விரட்ட தளங்களில் ஆறாவது ஆலயமாக இது போற்றப்படுகிறது. ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இன்று ஆறாவது கால யாகசாலை பூஜை பூர்ணாகுதியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடன்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.