in

குன்றக்குடி அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

குன்றக்குடி அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

 

குன்றக்குடி அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே உள்ள குன்றக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமகாளியம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

குன்றக்குடி ஆதீன மடத்துக்கு பாத்தியப்பட்ட மிகப் பழமையான திருக்கோவிலை புனரமைத்து திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.

தொடர்ந்து பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசங்களுக்கு குன்றக்குடி அடிகளார் சுவாமிகள் பச்சைக்கொடி அசைக்க வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டன.

தொடர்ந்து மூலவர் வீரமாகாளியம்மனுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்து தீப ஆராதனை காட்டினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீரமாகாளி அம்மனை வழிபட்டனர். இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சுவாமிகள் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் அவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

திருப்பத்தூர் ஶ்ரீ பூமாரி அம்மன் திருக்கோவில் வசந்த பெருவிழா

திண்டிவனம் ஸ்ரீ மூங்கில் அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா