அடித்தது கொள்ளும் குஷ்பூ..வும் … ராதிகாவும்
ராதிகா எங்க கால வைச்சாலும் வெற்றி வாகை சூடுராரோ இல்லையோ தன் பெயரை நச்சுனு அந்த எடத்துல பதிச்சிகிடுவாரு.
இவரை இறக்கினால் சிக்ஸர் அடிப்பார் என்ற நம்பி சரத்குமார் இவரை அரசியல் களத்தில் தள்ளி இருக்கிறார். கட்சியை ஆரம்பித்தது இவர்தான் ஆனால் இந்த தடவை ராதிகாவை எலக்ஷனில் நிறுத்தி இருக்கிறார்(நம்ம பப்பு வேகலை ராதிகாவாது வேக வைபாரா..இன்னு தான்…
சினிமா சீரியல் என்று இரண்டிலும் கலக்கிய நடிகை ராதிகா தற்போது அரசியலிலும் கலக்குவார் என்ற எதிர்பார்ப்பில் நடிகர் சரத்குமார் இறக்கிருகிறார்.
சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கி பல ஆண்டுகள் ஆனாலும் தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதியில் இவருக்கு செல்வாக்கு அதிகம் ஆனால் தொகுதியை பற்றி கவலைப்படாமல் சம்பாதிபதிலேயே குறியா இருந்ததால இவருடைய செல்வாக்கு நாளுக்கு நாள் மங்க ஆரம்பித்தது.
சுதாரித்து கொண்ட சரத் மோடி Technique..கை தனக்கு சாதகமா பயன்படுத்தி திடீரென்று தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து ரோசா…பு சின்ன ரோசா மோடி பெயர சொல்லும் இந்த ரோஸாப்பு…. சரத் பாடினுகிராராம்.
இப்படியே விட்டா சரத்குமாருக்கு கட்சியில் செல்வாக்கு இருக்காது என்று ராதிகா ஐடியா கொடுத்ததினால் தான் பாஜகவுடன் இணைந்திருப்பதாக சரத்குமார் கூறினார்.
கட்சி இணைப்புக்கும் இன்னொரு காரணமும் இருக்காம் இத்தனை காலம் சன் டிவியுடன் இணைந்து ராதிகா கொடிகட்டி பறந்தார். ஆனால் தற்பொழுது சன் டிவி ராதிகாவை கழட்டிவிட்டதனால் பண நெருக்கடியும் இவர்களுக்கு இருக்கிறதாம்.
அதனால் அரசியலில் குதித்தால்தான் சம்பாதிக்க முடியும் என்று நினைத்து இறங்கி இருக்கிறார். இவருக்குப் பின்னால் வந்த குஷ்பூ பிஜேபில் இணைந்து கோடி கோடியாக சம்பாதித்து விட்டார் சீனியர் ஆன நான் இன்னும் அப்படியே இருக்க வேண்டுமா என்று இவரும் தேர்தலில் குதித்து இருக்கிறார்.
தற்பொழுது குஷ்பூக்கும் ராதிகாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறதாம் யார்கட்சியில் முன்னணி பதவியை புடிக்கிறது என்று ..பதவி மயக்கம் என்பது மனிதனை பிடித்திருக்கும் …. நோய்