சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த குத்தாலம் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா
தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த குத்தாலம் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா, மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் கையால் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த தண்டர் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா இன்று குத்தாலத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்த 30 மாணவ மாணவிகளுக்கு ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் கையால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் உலக சாதனைகள் சிலம்பம் சுற்றிய நிகழ்ச்சியின் மாதிரி வடிவத்தை குத்தாலத்தில் செய்து காண்பித்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.