எல். முருகனின் வேட்பு மனு ஏற்புஆ.ராசா வேட்பு மனு பரிசீலனை நிறுத்திவைப்பு
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல் முருகனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
ஆ.ராசா, லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு பரிசீலனை நிறுத்திவைப்பு
இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜெயக்குமார் வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திமுக சார்பில் போட்டியிடும் ஆ இராசாவின் வேட்பு மனு சரிபார்ப்பு நடந்த போது குளறுபடிகள் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வனின் வேட்பு மனு குளறுபடிகள் இருப்பதால் அவரின் வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மற்ற வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ஆ. இராசா மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வனின் வேட்பு மனு சரிபார்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.