L2 : எம்புரான் Trailer இணையத்தில் கசிந்தது
மலையாளத் திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று லூசிஃபர்.
படத்தின் இரண்டாம் பாகமான L2:எம்புரான் தற்போது பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது.
படத்தின் டிரெய்லரை இன்று காலை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர், மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள L2: எம்பூரான் படத்தின் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் இன்று மதியம் 01:08 மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டது.
இருப்பினும், ஸ்ரீ கோகுலம் மூவீஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் எதிர்பாராத விதமாக Trailer கசிந்ததால், தயாரிப்பாளர்கள் அதை உடனடியாக வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மோகன்லால், ஸ்டீபன் நெடும்பள்ளி என்றும் அழைக்கப்படும் குரேஷி அப்ராம் வேடத்தில் மீண்டும் நடிக்கிறார், டிரெய்லரில் கேரள மாநிலத்தில் நடக்கும் அதிகாரப் போராட்டத்தைச் சுற்றி வருகிறது கதை.
மார்ச் 27, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட நட்சத்திரங்கல் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு பிரேமிலும் அபாரமான கடின உழைப்பும் முயற்சியும் தெளிவாகத் தெரிகிறது. காட்சியமைப்பு மற்றும் பின்னணி இசை Trailer..ரில் தெறிக்க விடுகிறது.
Trailer…ரை பார்த்த ரஜினிகாந்த் அருமையாக இருக்கிறது என்று பிருத்விராஜ்.. மற்றும் மோகன்லால்….ளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.