in

மீண்டும் வெளியாகும் L2: எம்பூரான்….குழப்பத்தில் ரசிகர்கள்

மீண்டும் வெளியாகும் L2: எம்பூரான்….குழப்பத்தில் ரசிகர்கள்

 

கடந்த 27ஆம் தேதி பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்பூரான் ரிலீசாகி உலக அளவில் இதுவரை 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

ஒரு பக்கம் வசூலை வாரி குவித்தாலும் மறுபக்கம் ஓயாத சர்ச்சைகள் என்று படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.

இப்படத்தில் ஹிந்துக்களை மோசமாக சித்தரித்திருப்பதாகவும் பஜ்ரங்கி குரூப் மிக மோசமாக கொலை செய்யப்படுவதும் பார்க்கவே ரணகளமாக இருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்திற்கு சென்சார் போர்டு A Certificate கொடுத்தது தற்பொழுது சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று சென்சார் போர்டு கட்டளையிட்டு இருக்கிறது.

ஏப்ரல் இரண்டாம் தேதி சர்ச்சையான காட்சிகள் நீக்கப்பட்டுபுதிய எம்புரான் வெளியே வருகிறார்.

படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் படத்தில் சுவாரசியம் இல்லை என்ற நெகட்டிவ் கமெண்ட்ஸும் வெளிவந்திருக்கிறது. அதனால் சில காட்சிகள் கட் போட்ட பிறகு சுவாரசியம் கூடுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

What do you think?

நடிகைகளுக்கு வீட்டில் பார்ட்டி வைத்த சூர்யா ஜோதிகா

சர்தார் 2…வில் இருந்து விலகிய யுவன்சங்கர் ராஜா