வத்தலக்குண்டு அருகே வீருவீட்டில் பச்சிளங்குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கூலித் தொழிலாளி கைது
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா விருவீடு பகுதியைச் சேர்ந்த பிச்சை மணி, வயது 38. இவர் இதே பகுதியைச் சேர்ந்த சுமார் இரண்டரை வயது பால்வாடி படிக்கக்கூடிய பச்சிளங்குழந்தையை நேற்று பாலியல் தொந்தரவு செய்ததாக அவரது பெற்றோர்களும் உறவினர்களும் விருவீடு போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து விசாரித்த போலீசார் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க அறிவுரை கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டரை வயதுள்ள பச்சிளங்குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கூலித் தொழிலாளி பிச்சைமணி மீது நிலக்கோட்டையை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்கு பதிவு செய்து பிச்சைமணியை கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்திரேட் கோர்ட் மேஜிஸ்திரேட் நல்ல கண்ணன் முன்னிலையில் போலீசார் ஆஜர் படுத்தி பின்னர் விசாரித்து மேஜிஸ்ட்ரேட் 15 நாள் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். பச்சிளங்குழந்தையை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.