நாமக்கல் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் 59-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு லட்சார்சனை பெருவிழா
நாமக்கல் – மோகனூர் சாலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இன்று 59-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது பின்னர் மூலவர் மற்றும் உற்சவ ஐயப்ப சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை பெருவிழாவை மிக விமர்சையாக நடத்தினர்இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை வழிப்பட்டனர்
மாலை 6 மணியளவில் ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது