திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் லட்சுமி குபேர ஹோமம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தீபாவளி அன்று லட்சுமி குபேர ஹோமம் நடைபெறும். இல்லம் மற்றும் வியாபாரம் செல்வ செழிப்போடு விளங்க செய்யப்படுவது லட்சுமி குபேர ஹோமம். சௌபாக்கிய பொருட்களை சமர்ப்பித்து நடைபெறும்
இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனை முன்னிட்டு மகாலிங்க சுவாமி திருக்கோவிலின் கர்ப்பகிரகத்திற்கு வெளிச்சூற்றில் வடகிழக்கு மூலையில் கஜலட்சுமி சன்னதி அமைந்துள்ளது.
தீபாவளி தினமான இன்று மாலை கஜலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்வித்து அஷ்ட லட்சுமிகளுக்கு என எட்டு கடங்கள் ஸ்தாபனம் செய்து,நெல் போன்ற தானியங்களும், வெள்ளி காசுகளும் வைத்து வழிபாடு நடைபெற்றது. அஸ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்க வேண்டி ஹோமம் நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்த ஹோமத்திற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்