in ,

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜை – மனமுறுக வேண்டி அம்மனை வழிபட்ட பக்தர்கள்

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜை – மனமுறுக வேண்டி அம்மனை வழிபட்ட பக்தர்கள்

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மதுரை மாடக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஈடாடி அய்யனார் திருக்கோவிலில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது

இந்த விளக்கு பூஜையின் போது கோவிலில் உள்ள சின்ன கருப்பண்ண சுவாமி பெரிய கற்பனைசுவாமி மற்றும் பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்ட நிலையில்

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பேச்சியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

208 பெண்கள் கலந்துகொண்டு இந்த விளக்கு பூஜை நடைபெற்றது

விளக்கு பூஜைகள் கலந்து கொண்ட பெண்கள் ஒவ்வொருவரும் விளக்கு பூஜை கூறிய பாடல் பாடி அம்மனின் பாடலை மனம் உருக பாடி ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான இந்த விளக்கு பூஜையில் கோலாகலமாக கலந்து கொண்டனர்

ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஒவ்வொரு ஆலயங்களிலும் இன்று காலை முதலாகவே பெண்கள் விரதம் இருந்து அம்மன்களை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்து வரக்கூடிய நிலையில் இன்று இந்த கோவிலில் நடைபெற்ற விளக்கு பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் உட்பட ஆண்கள் சிறுவர் சிறுமியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர்

What do you think?

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மஹாலில் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக ஆலோசனை கூட்டம் ராஜன் செல்லப்பா தொண்டர்களிடம் உரையாற்றினார்.

தூங்கா நகரம் மதுரை.. அவ்வையார் பாட்டு.. இதுதாங்க தமிழ் கலாச்சாரம்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமை