மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மயங்கி விழுந்த மகன் சண்முக பாண்டியன்
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவரும் ஆன விஜயகாந்த் அவர்களின் 72 வது பிறந்த நாளை கொண்டாட தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா மற்றும் ரசிகர்களும், தொண்டர்களும் நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கூடி விஜயகாந்த் சிலைக்கு மாலை தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் அவருடைய நினைவிடத்திற்கு பின்புறமாக விஜயகாந்த் அவர்களுக்கு ஆறடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைத்து அதனை கட்டி அணைத்து கதறிய பிரேமலதா.
‘கேப்டன் ஆலயம்’ என்ற யூடியூப் சேனலையும் தொடங்கினார். பல நலத்திட்டங்களையும் அறிவித்து தொண்டர்களுக்கு உணவுகளும் பரிமாறிய போது அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது கூட்ட நெரிசல் காரணமாக திடீரென்று மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையும் அளிக்கப்பட்ட போது சிறிது நேரம் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.
மேலும் நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு நடிகர் சங்கம் வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு பொதுச் செயலாளர் விஷால் மற்றும் துணைச் செயலாளர்கள் மாலை அணிவித்து விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.