மறைந்த பழம்பெரும் நடிகை புஷ்பலதா
பழம்பெரும் நடிகை புஷ்பலதா சென்னையில் நேற்று மரணம் அடைந்தார் 1960 மற்றும் 70களில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்தவர் புஷ்பலதா.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ் எஸ் ஆர், உள்ளிட்ட முன்னனி நடிகர்களோடும் நடித்தவர்.
மேலும் ரஜினிகாந்த், கமலஹாசனுக்கு அம்மாவாக நடித்தார்.
1999-ம் ஆண்டு இவர் கடைசியாக முரளி நடிப்பில் வெளியான ‘பூ வாசம்’ என்ற திரைப்படத்தில் நடித்தவர், அதன் பிறகு நடிக்கவில்லை.
புஷ்பலதா முன்னணி நடிகரான ஏவிஎம் ராஜனுடன் நானும் ஒரு பெண் தான் என்ற படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் அரும்பியது, 1966 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஒரு சில படங்களையும் தயாரித்தனர்.
மகாலட்சுமி, அபிராமி என்ற இரு மகள்கள் இவர்களுக்கு உண்டு. மகாலட்சுமி சில படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு இருவரும் மாறினர்.
சென்னை தியாகராயர் நகர் திருமலை பிள்ளை சாலையில் வசித்து வரும் புஷ்பலதா வயது மூப்பு காரணமாக உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு திடீரென்று மாரடைப்பால் மறைந்த இவருக்கு வயது 86. இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்தும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.