எதிர்க்கட்சி சொல்லும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய் இல்லை சிறப்பாக உள்ளது தேர்தல் வர உள்ளதால் அரசியல் செய்கிறார்கள் –
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேட்டி
கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் கூற மறுத்துவிட்டார்…
தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை.
10 ஆண்டுகாலம் உயர்த்தாமல் இருந்த சொத்து வரி திடீரென்று அதிகப்படி உயர்த்தினால் சிரமப்படுவார்கள் என்பதற்காக புதிய வழிமுறைகளை நகராட்சி நிர்வாக துறை எடுத்தது.
600 சதுர அடிக்கு கீழே உள்ளவர்களுக்கு சொத்து வரி இல்லை… 600 இல் இருந்து 1200 சதுரடி உள்ளவர்களுக்கு 25 சதவாதத்திலிருந்து 35 சதவீதம் வரையிலும் 1200 இதிலிருந்து 1800 சதுர அடி வரை 50 சதவீதம், 1800 இல் இருந்து 2400 வரை 70 சதவீதம் பெரிய வசதி படைத்தவர்கள் 100 சதவீதம் என சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்த்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் அதை நிறுத்தி வைப்பது அரசாங்கத்தினுடைய பணி அதனால் தமிழகத்தில் சொத்துவரி பெரிதாக உயர்த்தப்படவில்லை என்றார்..
மின்சாரத் துறையில் இருக்கும் சொத்துவரி பற்றி எனக்கு தெரியாது மாநகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்பட்ட வரி லிஸ்ட் என்னிடம் உள்ளது அதை வேண்டும் என்றால் உங்களிடம் தருகிறேன் என்றார்…
மழைக்காலம் முடிந்த பிறகு அனைத்து பகுதிகளிலும் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கும் தற்போது மழைக்காலம் என்பதால் சாலை அமைத்தால் சரியாக இருக்காது… அதனால் புதிய சாலை அமைக்க தாமதம் ஏற்படுகிறது
கோவை ஆவடி மாநகராட்சியை தொடர்ந்து திருச்சியிலும் மீட்டர் மூலம் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் வழங்கப்பட உள்ளது..
கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட்டு கொடுங்கள் 50 கோடி கொடுங்கள் என கேட்கிறார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்து கேட்டதற்கு…
அது யாரை சொன்னார்களோ அவரைக் கேளுங்கள் என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது….
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்?
எதிர்க்கட்சி சொல்லும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய் இல்லை சிறப்பாக உள்ளது தேர்தல் வர உள்ளதால் அரசியல் செய்வதற்காக இது போன்று பேசுகிறார்கள் அதெல்லாம் உண்மை இல்லை சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது…
அதிக முறை திருச்சிக்கு வருகிறேன் மற்ற மாவட்டங்களுக்கு சென்று விட்டு திருச்சிக்கு தமிழக முதல்வர் வருகிறேன் என்று சொல்லி உள்ளார்…
அப்போது திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைய உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மணப்பாறை சிப்காட் தொழிற்சாலை போன்ற அனைத்து திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.
குடியிருப்பு பகுதிகளை வணிக வளாகம் ஆக மாற்றினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அவர்களுக்கு வணிகத்திற்கான வரி வசூல் செய்யப்படும்.. அப்படி இருந்தால் எங்கு என்று சொல்லுங்கள் எங்களுக்கும் வருமானம் கூடும் என்றார்…